வடகொரியாவில் முதன்முறையாக ஒருவருக்கு கொரோனா அறிகுறி ?

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
Coronavirus, North Korea, first case, Coronavirus crisis, Corona, Covid-19, COVID-19 in North Korea


பையோங்யாங்: தங்கள் நாட்டில் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்ல என வடகொரியா தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில், வடகொரியாவில் முதன்முறையாக ஒரு நபருக்கு கொரோனா அறிகுறி இருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. கொரோனாவுக்கு 1 கோடியே 61 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.


latest tamil news




இந்நிலையில் தென்கொரியாவிலிருந்து வடகொரியாவிற்கு சட்டவிரோதமாக நுழைந்த நபரால் கொரோனா அறிகுறி தென்பட்டதையடுத்து அதிபர் கிம் ஜாங்க் உன் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நாடு தழுவிய அவசர நிலையை பிரகடனப்படுத்தியதாகவும், கொரோனா தொற்று பரவால் தடுக்க கேஸாங் நகரில் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன் வடகொரிய மக்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே வரக்கூடாது. முக்கவசம் அணியாமல் வெளியே திரிபவர்களை கைது செய்து 3 மாதம் கடும் வேலை செய்யும் நூதன தண்டனையை அந்நாட்டு அரசு அமல்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raghunathan Nagarajan Ragu Naga - Atlanta,யூ.எஸ்.ஏ
26-ஜூலை-202017:07:28 IST Report Abuse
Raghunathan Nagarajan Ragu Naga உண்மையான செய்திகளை வட கொரியா அரசு கூறுவதற்கு வாய்ப்பு இல்லை. அங்கு கம்யூனிஸ்ட் சீனாவை விட மிக மோசமான ஊடகங்கள். எந்த ஒரு உண்மையான நிகழ்வும் வெளிப்படை தன்மையுடன் வெளிவர இயலாது. எனவே இந்த செய்தி உண்மை என்று நம்ப இயலாது
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
26-ஜூலை-202012:46:23 IST Report Abuse
Ramesh Sargam ஒரே ஒரு நபருக்கு கொரோனா அறிகுறியாம் இது நம்பும்படியாகவா இருக்கிறது? அந்த அளவுக்கு மக்களை நாட்டின் அதிபர் "அந்த சிறுவன்" பயத்தில் வைத்திருக்கிறான். இந்தியாவில் அப்படியெல்லாம் நடக்குமா?? கொரோனாவே இல்லையென்றாலும், இருக்கு என்று கூறி ஆட்சியை கவிழ்க்க நமது அரசியல்வாதிகளை விட்டால் யாரால் முடியும்.
Rate this:
Cancel
26-ஜூலை-202009:43:25 IST Report Abuse
நக்கல் வடகொரியாவில் ஒருவருக்கு கொரோனா இருந்தது... அவர் இன்று உயிருடன் இருக்க வாய்ப்புகள் மிகக் குறைவு..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X