'ஒரு மாவட்டம் ஒரு பொருள்': ராகுலுக்கு முதல்வர்கள் பதிலடி

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (36)
Share
Advertisement
மாவட்டம் ,பொருள்,ராகுல், முதல்வர்கள், பதிலடி

புதுடில்லி :'ஒரு மாவட்டம் ஒரு பொருள்' திட்டம் தன் யோசனை என கூறிய ராகுலுக்கு குஜராத் முதல்வர் விஜய் ரூபானியும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் பதிலடி கொடுத்துள்ளனர்.

ஹிமாச்சல பிரதேசத்தில் 'ஒரு மாவட்டம் ஒரு பொருள்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சிறந்த பொருள்கள் சந்தைப்படுத்தப்படும். மத்திய அரசு உதவியுடன் குறு, சிறு நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.


latest tamil news



இதுகுறித்து காங். - எம்.பி. ராகுல் 'இது சிறந்த யோசனையாகும். சில மாதங்களுக்கு முன் இத்திட்டத்தை பரிந்துரைத்தேன்' என 'டுவிட்டரி'ல் குறிப்பிட்டார்.

இந்நிலையில் குஜராத் முதல்வராக ஆனந்திபென் படேல் இருந்தபோது 'ஒரு கிராமம் ஒரு பொருள்' என்ற திட்டத்தை அறிமுகம் செய்திருந்தார். அதை சுட்டிக்காட்டி பா.ஜ. தலைவர்கள் ராகுலுக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி டுவிட்டரில் கூறியுள்ளதாவது: ராகுல் அவர்களே குஜராத்தின் முயற்சிகளை காப்பியடித்து அவை என் யோசனை என கூறுவது புத்திசாலித்தனம் அல்ல. உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கவேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் உங்கள் 'ஸ்கிரிப்ட்'டுகளை எழுதிக்கொடுப்பவருக்கு தெரிந்திருக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதேபோல் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது: ராகுலின் ஞாபக சக்தி பலவீனமாக உள்ளதா...2017ல் பா.ஜ., தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளூர் பொருட்களை ஊக்குவிப்பது குறித்து கூறப்பட்டிருந்தது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
30-ஜூலை-202005:37:33 IST Report Abuse
NicoleThomson மாநில அளவில் ஒரு சுடலை , தேசிய அளவில் சரியா படலை
Rate this:
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
26-ஜூலை-202017:19:08 IST Report Abuse
Nalam Virumbi அரசியல் எதிர் கட்சி தலைவராக இருக்க முக்கியமான தகுதி... எழுதிக் கொடுத்ததை உளரலாக, படிக்க வேண்டும்
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
26-ஜூலை-202017:16:52 IST Report Abuse
Endrum Indian அய்யயோ பப்பு நீ என்ன சொன்னாலும் காங்கிரஸ் அடிமைகள் தவிர்த்து யாரும் சப்போர்ட் செய்யமாட்டேன் என்கின்றார்களே அய்யகோ முஸ்லீம் நேருவின் வலி/வழி வந்த உனக்கு ஏன் இந்த சோதனை???ஒரு கருத்து கூட இப்போது உன்னை ஆதரித்து வரமாட்டேன் என்கின்றதே தயவு செய்து நல்ல (தெலுங்கு நல்ல) பணம் கொடுத்து உனக்கென்றே ஒரு பண அடிமை கூட்டத்தை எல்லா இடத்திலும் வைத்துக்கொள் உடனே. இப்போது இருப்பது போதிய அளவு இல்லை என்று நன்கு தெரிகின்றது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X