கொரோனா தொற்றில் இருந்து மீண்டார் பிரேசில் அதிபர்

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Brazil, Jair Bolsonaro, corona, coronavirus, covid-19, corona cases, corona update, coronavirus update, corona cases worldwide, corona crisis, covid 19 pandemic, worldwide crisis, Recover, Test negative, பிரேசில், அதிபர், போல்சனாரோ, கொரோனா, வைரஸ், குணமடைந்தார்

பிரேசிலியா: பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிரேசிலில் இதுவரை 20 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகிலேயே அதிக பாதிப்புள்ள நாடுகளில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதற்கிடையே அந்நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, கொரோனாவை பற்றி கவலைப்படாமல் மக்கள் சுதந்திரமாக வெளியே வர வேண்டும் என கூறி வந்தார். மேலும், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது, மாஸ்க் அணியாமல், இருந்து வந்தார்.


latest tamil news


இந்நிலையில் கடந்த ஜூலை 7ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட அவர், விரைவில் பணிக்கு செல்ல வேண்டும் எனவும், வீட்டில் தனித்திருக்க முடியவில்லை எனவும் கூறி, சில நாட்கள் இடைவெளியில் தொடர்ச்சியாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். கடந்த இரு வாரங்களில் நான்காவது பரிசோதனையை மேற்கொண்ட அவர், 4வது சோதனையில் கொரோனாவில் குணமடைந்ததாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில், ‛அனைவருக்கும் வணக்கம், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளேன்,' என புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
26-ஜூலை-202012:07:24 IST Report Abuse
S. Narayanan குட் மீண்டும் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X