பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சியில் வீடு வீடாக மூலிகை பானம் வழங்கல்

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

ஈரோடு: மாநகராட்சி பகுதியில், நோய் எதிர்ப்பு சக்தி மூலிகை பானம், வீடு வீடாக வழங்கப்படுகிறது.
ஈரோடு அரசு மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவ மைய டாக்டர் பசுபதி கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில், தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மாநகர் பகுதியில் தாக்கம் அதிகமாக உள்ளது. குழந்தை, பெரியவர்கள் என பாகுபாடின்றி, தொற்றுக்கு ஆளாகின்றனர். இதனால் தொற்று ஏற்பட்ட பகுதிகள் மட்டுமின்றி, அனைத்து பகுதிகளிலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், மூலிகை பானம் வழங்க, மாநகராட்சி, அரசு மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவ மையம் ஏற்பாடு செய்துள்ளது. கடந்த, 6ம் தேதி முதல் மூலிகை பானம் வழங்கப்பட்டு வருகிறது. சுகாதார பணியாளர், ஆய்வாளர், அலுவலர்கள், 60 வார்டுகளிலும், வீடு வீடாக சென்று, தினமும் வழங்கி வருகிறோம். இஞ்சி, துளசி இலை, மிளகு, அதிமதுரம், மஞ்சள் ஆகியவற்றை கலந்து தயாரிக்கப்பட்டுள்ளது. ஐந்து லிட்டர் பானத்தை நூறு பேர் குடிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X