தமிழ்நாடு

ஆக.,1 முதல் பஸ்கள் இயங்க வாய்ப்பு: போக்குவரத்து அதிகாரிகள் எதிர்பார்ப்பு

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

ஈரோடு: ஆக.,1 முதல், மீண்டும் மண்டல அளவில், பஸ் இயக்கத்துக்கு, அரசு போக்கு வரத்து கழகம் தயாராகி வருகிறது.


கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச், 24ல் நிறுத்தப்பட்ட பஸ் போக்குவரத்து, ஜூன், 1 முதல் ஆறு மண்டலமாக பிரித்து துவங்கியது. 50 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இந்நிலையில் தொற்று பரவல் அதிகரித்ததால், ஜூன், 25ல் மாவட்ட அளவில் மட்டுமே இயங்கி, அம்மாத இறுதியில் முழுமையாக நிறுத்தப்பட்டது. தற்போதும் கொரோனா பரவல் குறையவில்லை. இந்நிலையில் வரும் ஆக.,1க்குப்பின் ஊரடங்கு நிலை இல்லை என்றும், சில தளர்வுகள் செய்யப்படும் என்றும், அரசு தரப்பில் தெரிவித்து வருகின்றனர். இதனால் மீண்டும் பஸ்கள் இயக்கப்படும் எனத் தெரிகிறது.

இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது: ஜூன், 1ல் தொடங்கியது போல், எட்டு மண்டல அளவில், பஸ் இயக்கும் வாய்ப்பு வரும் என எதிர்பார்க்கிறோம். அதற்கேற்ப பஸ்களை பழுது நீக்கம் செய்து, பேட்டரி உள்ளிட்டவைகளை சார்ஜ் செய்து, டிரைவர்களை வரவழைத்து இயக்கி, சோதனை செய்கிறோம். அனைத்து பஸ்களும் நல்ல நிலையில் உள்ளன. டிக்கெட் மிஷின்கள், நான்கு மாதமாக, முழு அளவில் சார்ஜ் செய்து, பயன்படுத்தாமல் விட்டதால், பழுது அதிகமாகி விட்டது. எனவே முன்புபோல், டிக்கெட் முறை சில மாதங்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கிறோம். அதற்கும் தயாராகி வருகிறோம். நான்கு மாதமாக, போக்குவரத்து ஊழியர்களின் சம்பளம் உட்பட அனைத்து செலவு ளுக்கும், அரசு நிதி வழங்கி வருகிறது. பஸ் இயக்கம் துவங்கினால், அப்பிரச்னைக்கு குறைந்த அளவில் தீர்வு கிடைக்கும். வரும், 30ல் அறிவிப்பு வரும் என எதிர்பார்த்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X