பொது செய்தி

தமிழ்நாடு

ஆர்.பி.எப்., வீரர்கள் 14 பேர் திரும்பினர்

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

ஈரோடு: கொரோனா பரிசோதனைக்கு பின், ஈரோடு ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள், 14 பேர் பணியில் சேர்ந்தனர். ஈரோடு ரயில்வே பாதுகாப்பு படையில் பணியாற்றிய, 51 வயது போலீசார் ஒருவருக்கு, கொரோனா தொற்று, 12ல் உறுதியானது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர். அவருடன் பணி செய்த போலீசார், உயரதிகாரிகள், 14 பேருக்கு கடந்த வாரம் பி.சி.ஆர்., சோதனை நடந்தது. இதையடுத்து அனைவரையும், 14 நாட்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இவர்களில் யாருக்கும், தொற்று இல்லை என்பது உறுதியானதால், பணிக்கு அழைக்கப்பட்டனர். இரு தினங்களுக்கு முன், 14 பேரும் பணியில் சேர்ந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X