பொது செய்தி

தமிழ்நாடு

பா.ஜ.,வில் மாற்று கட்சியினர் பொதுமக்கள் இணையும் விழா

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

பெருந்துறை: ஈரோடு மாவட்ட பா.ஜ., இளைஞரணி சார்பில், மாற்று கட்சியினர் மற்றும் மக்கள், பா.ஜ.,வில் இணையும் விழா, காஞ்சிக்கோவிலில் நடந்தது. வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ராயல் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் அஜித்குமார் முன்னிலையில், மாற்று கட்சியினர் மற்றும் மக்கள், கட்சியில் இணைந்தனர். ஏழை, எளிய மக்களுக்கான, மத்திய அரசின் பல்வேறு மானிய திட்டங்கள், பிரதமரின் இலவச மருத்துவ காப்பீடு திட்டம், வீடு கட்டும் திட்டம் குறித்தும், மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கையேடு வழங்கப்பட்டதாக, கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. கடந்த, 15 நாட்களில் 6,000க்கும் மேற்பட்டோர், ஆயுஷ்மான் பாரத் யோகா திட்டத்தில் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. விழாவில், ஐந்து லட்சத்துக்கான இலவச இன்சூரன்ஸ் திட்டத்துக்கான அட்டை வழங்கப்பட்டது. மாவட்ட பொருளாளர் மனோகரன், விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினர் விஸ்வ நாதன், மாவட்ட மகளிரணி துணை தலைவி மணிமேகலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X