பொது செய்தி

தமிழ்நாடு

நடப்பாண்டு 30 ஆயிரம் டன் நெல் கொள்முதல்: கடந்த ஆண்டை விட 13 ஆயிரம் டன் கூடுதல்

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில், நேரடி நெல் கொள்முதல் மையங்கள் மூலம், 30 ஆயிரத்து, 400 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.


ஈரோடு மாவட்டத்தில், கடந்த ஒன்றரை மாதமாக, நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் மையம், 26 இடங்களில் திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அறுவடை பணி முடிந்ததால், நேற்றுடன் மையங்கள் மூடப்பட்டன. நேற்று வரை, 30 ஆயிரத்து, 400 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை மாவட்டத்தில், 38 இடங்களில் மையம் திறக்கப்பட்டு, 17 ஆயிரத்து, 400 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறியதாவது: மாவட்டத்தில், 26 நெல் கொள்முதல் மையம் மூலம் நடப்பாண்டு, 30 ஆயிரத்து, 400 டன் நெல் கொள்முதலாகி உள்ளது. நடப்பாண்டு ஊரடங்கால், வெளி வியாபாரிகள் வரத்து குறைந்ததாலும், அரசு நல்ல விலை கொடுத்ததாலும், கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சபை தலைவர் தளபதி கூறியதாவது: தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசன பகுதியில், குண்டு ரக நெல் அதிகமாக சாகுபடி செய்யப்படும். இந்த ரகத்தை, கேரள மக்கள் விரும்பி உண்பார்கள். ஒவ்வொரு ஆண்டும், கேரளா வியாபாரிகள் அதிகம் வந்து, கொள்முதல் செய்து செல்வர். நடப்பாண்டு கொரோனா ஊரடங்கால், அவர்களால் வர இயலவில்லை. இதனால் கொள்முதல் மையங்களில் கூடுதல் நெல் விற்பனையாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X