சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்திய ஆசாமி கைது

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

பவானி: ஜம்பை அருகே, நள்ளிரவில் ஆற்றில் வாகனத்துடன், மணல் கடத்தியவரை, வருவாய் துறை அதிகாரிகள் பிடித்தனர். பவானி அருகே, ஜம்பை சுடுகாடு அருகே, பவானி ஆறு செல்கிறது. இப்பகுதியில் சமீபமாக, இரவில் மணல் கடத்தல் தொடங்கியுள்ளது. இதுகுறித்த புகாரின்படி, வருவாய் துறை அதிகாரிகள், நேற்று முன்தினம் இரவு, திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கரையோரத்தில், மினி வாகனம் நின்றது. அப்பகுதியில் ஆற்றில் ஒருவர் மணல் அள்ளிக்கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்தனர். இதில் ஜம்பையை சேர்ந்த சுரேஷ், 28, என்பது தெரிந்தது. சிமென்ட் சாக்கில், 20 மணல் மூட்டைகளை, வாகனத்தில் ஏற்றியிருந்ததும் தெரியவந்தது. மணல் மூட்டை, வாகனத்தை பறிமுதல் செய்தனர். சுரேஷ் மீது, பவானி போலீசில் புகார் தந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X