ஊழியருக்கு வைரஸ் தொற்று: வனச்சரக அலுவலகம் மூடல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊழியருக்கு வைரஸ் தொற்று: வனச்சரக அலுவலகம் மூடல்

Added : ஜூலை 26, 2020
Share

தாளவாடி: ஊழியருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால், தலமலை வனச்சரக அலுவலகம் பூட்டப்பட்டது. சத்தி வனக்கோட்டம், தலமலை வனச் சரகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு, காய்ச்சல் ஏற்பட்டதால், சளி மாதிரி எடுத்து, பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து வனச்சரக அலுவலக ஊழியர்கள் உள்பட, 60 பேரிடம், சளி மாதிரி சேகரித்து, பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்காலிகமாக தலமலை வனச்சரக அலுவலகம் மூடப்பட்டது. பரிசோதனை முடிவுகள் தெரிந்தபின், அலுவலகம் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படுமென, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X