சாலை பணிக்காக குடிநீர் குழாய்கள் உடைப்பு

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு மாநகரில், பாதாள சாக்கடை திட்ட நிறைவு பணி, கட்டட சாக்கடை குழாயை பாதாள சாக்கடை குழாயுடன் இணைத்தல், ஊராட்சிகோட்டை குடிநீர் திட்டத்துக்காக நீல நிற பைப்லைன் வழங்கும் பணி, புதை மின்வட கேபிள் பதிக்கும் பணி நடக்கிறது. நிறைவு பெறாத பகுதியிலும், சாலை அமைக்கும் பணியில் மாநகராட்சி ஈடுபடுகிறது. சில இடங்களில் தெரு, சாலையை உயர்த்தியும், சாலையை தோண்டி, சமன் செய்தும் சாலை அமைக்கின்றனர். ஈரோடு ஜெயின் கோவில் பகுதி, மீரான் மொய்தீன் வீதி, எஸ்.எஸ்.லே-அவுட் பகுதியில் தற்போது சாலை அமைக்கப்படுகிறது. பணியின் போது, பழைய குடிநீரின் ஆரஞ்சு நிற பைப், ஊராட்சிகோட்டை குடிநீர் நீல நிற பைப், புதை மின்வட கேபிள்களை வெட்டி, பிய்த்து, நாசம் செய்வதாக, மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து மக்கள் கூறியதாவது: ஊராட்சிகோட்டை குடிநீருக்கான நீல நிற பைப், பழைய ஆரஞ்சு நிற பைப்பை, சாலை அமைக்கும் பணிக்காக துண்டிக்கின்றனர். இதை சரி செய்ய, 5,000 ரூபாய்க்கு மேல் செலவாகும். அவ்வளவு செலவு செய்தாலும், 10 நாட்களுக்கு பின்னர்தான் பணி நடக்கும். பணி செய்ய வருவோரிடம், பொருட்கள் வாங்கி கொடுத்து, அவர்களுக்கு தனியாக, 1,000 ரூபாய்க்கு மேல் தர வேண்டி உள்ளது. இதை மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் உணர்ந்து, இதுபோன்ற பணியின்போது, பைப்லைன் துண்டிக்கப்பட்டால், அப்பணி செய்பவர்களை சரி செய்து கொடுக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும். இப்பணியில் ஈடுபடும் ஜே.சி.பி., இயந்திர ஆப்பரேட்டர், மாநகராட்சி ஊழியர்கள் மோசமாக பேசுகின்றனர். இதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மக்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X