பொது செய்தி

தமிழ்நாடு

2 நாளில் ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் ரஷ்ய மாணவி உள்பட 45 பேர் பாதிப்பு

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

ஆத்தூர்: இரு நாளில், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில், ரஷ்யாவில் இருந்து வந்த எம்.பி.பி.எஸ்., மாணவி உள்பட, 45 பேருக்கு கொரோனா உறுதியானது.
ஆத்தூர், தாண்டவராயபுரம், 27 வயது பெண்; ஈச்சம்பட்டி, 30 வயது ஆண்; கீரிப்பட்டி, 31 வயது பெண்; தம்மம்பட்டியில், தனியார் மருந்து கடையில் பணிபுரியும், கீரிப்பட்டியை சேர்ந்த, 35 வயது ஆண்; நரசிங்கபுரம், 50 வயது ஆண்; அப்பமசமுத்திரம், 57 வயது பெண், 10, 7 வயது பெண் குழந்தைகள்; காளியம்மாள் கோவில் தெரு, 50 வயது ஆண்; கருப்பண்ணன் கோவில் தெரு, 30 வயது ஆண்; ஆத்தூர், ராமர் தெரு, 20 வயது ஆண்; கடைவீதி, நைனி தெரு, 29 வயது ஆண்; நரசிங்கபுரம், விநாயகபுரம், 31 வயது பெண்; அம்மம்பாளையம், அன்னை சத்யா நகர், 13 வயது சிறுவன் என, 14 பேருக்கு, தொற்று உறுதியானது. ரஷ்யாவில் எம்.பி.பி.எஸ்., படித்து வந்த, தம்மம்பட்டி, கொண்டையம்பள்ளியைச் சேர்ந்த, 19 வயது மாணவி, சமீபத்தில் சொந்த ஊர் வந்தார். அவருக்கும், அதே ஊரில், 17 வயது சிறுவனுக்கும், பாதிப்பு உறுதியானது. செந்தாரப்பட்டியில், மளிகை கடை உரிமையாளரான, 30 வயது பெண்; மற்றொரு மளிகை கடையில் பணிபுரியும், 48 வயது ஆண்; தம்மம்பட்டியில், உரக்கடையில் பணிபுரியும், 30 வயது ஆண்; 40, 48 வயது ஆண்களுக்கு, கொரோனா உறுதியானது. நத்தக்கரை, 25 வயது கர்ப்பிணி; தலைவாசல், மேலத்தெரு, 46 வயது ஆண்; சாத்தப்பாடி, 50 வயது பெண்; வீரகனூர், வீ.ராமநாத புரம், 45 வயது ஆண்; வீரகனூர், பழையபேட்டை, 46 வயது ஆண்; அயோத்தியாப்பட்டணம், பீமனூர், 30 வயது பெண்; பனமரத்துப்பட்டி, நாட்டார்மங்கலம், 27 வயது ஆண்; பெத்தநாயக்கன்பாளையம், 61, 26 வயது ஆண்கள்; ஏற்காடு தீயணைப்பு நிலையத்தில் பணிபுரியும், 31, 37 வயதுடைய தீயணைப்பு வீரர்கள் என, 32 பேருக்கு, நேற்று முன்தினம், தொற்று உறுதியானது. நேற்று ஆத்தூர், முதலாவது காந்தி சாலையைச் சேர்ந்த, 68 வயது கணவர், 57 வயது மனைவி; பெத்தநாயக்கன்பாளையம், உமையாள்புரம், 25 வயது ஆண்; பனமரத்துப்பட்டி, அம்மாபாளையம், 36 வயது ஆண்; ஏற்காடு, ஜெரீனாக்காடு, 48 வயது தாய், 18 வயது மகளுக்கு, நேற்று, கொரோனா உறுதியானது. அயோத்தியாப்பட்டணம், 33, 29 வயது ஆண்கள்; சுக்கம்பட்டி, 31 வயது பெண், 9 வயது சிறுவன், 4 வயது சிறுமி; வீராணம், 25 வயது ஆண்; காரிப்பட்டி, 65 வயது பெண் என, 13 பேருக்கு, நேற்று தொற்று உறுதியானது. இவர்கள், ஆத்தூர், சேலம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X