கை.புதூரில் தொற்றால் முதியவர் பலி: சுகாதாரத்துறை வீடுதோறும் கணக்கெடுப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கை.புதூரில் தொற்றால் முதியவர் பலி: சுகாதாரத்துறை வீடுதோறும் கணக்கெடுப்பு

Added : ஜூலை 26, 2020
Share

வீரபாண்டி: கை.புதூரில், தொற்றால் முதியவர் பலியானதால், சுகாதாரத்துறையினர், வீடுதோறும் சென்று, சளி, காய்ச்சல் உள்ளவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தினர்.


சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி, எஸ்.பாப்பாரப்பட்டி ஊராட்சி, கை.புதூர், கரிகாலன் தெருவைச் சேர்ந்த, 60 வயது முதியவர், 15 நாளுக்கு முன், நடந்து செல்லும் போது, சாலையில் தடுமாறி விழுந்து படுகாயம் அடைந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம், வீடு திரும்பும் முன், கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில், தொற்று உறுதியானது. அத்துடன், அவரது, 50 வயது மனைவி, 26 வயது மகனுக்கும் தொற்று உறுதியானது. அன்று இரவே, மூவரும், சேலம் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று காலை, முதியவர் உயிரிழந்தார். இதை தொடர்ந்து, அவரது வீடு உள்ள பகுதியை சுற்றி, 45 பேருக்கு, நடமாடும் மருத்துவ குழுவினர், பரிசோதனைக்கு சளி மாதிரி சேகரித்தனர். மேலும், 60 வயதுக்கு மேற்பட்டோர், ரத்த கொதிப்பு, சர்க்கரை, இதய நோயாளிகள் குறித்து, வீடுதோறும் சென்று, சுகாதாரத்துறையினர், கணக்கெடுப்பு நடத்தினர். கிருமி நாசினி தெளித்து, அப்பகுதியை தடை செய்யப்பட்டவையாக அறிவித்து, 'பேனர்' வைத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X