மதியம் 3:00 மணிக்கு கடையை மூட உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மதியம் 3:00 மணிக்கு கடையை மூட உத்தரவு

Added : ஜூலை 26, 2020
Share
தம்மம்பட்டி: தம்மம்பட்டியில், மதியம், 3:00 மணிக்கு, கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தம்மம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில், சில நாளாக, கொரோனா' தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக, தம்மம்பட்டி பேரூராட்சி, சுகாதாரத்துறை சார்பில், வணிகர் சங்கம், அனைத்து வியாபாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. அதில், பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரமூர்த்தி பேசியதாவது:

தம்மம்பட்டி: தம்மம்பட்டியில், மதியம், 3:00 மணிக்கு, கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தம்மம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில், சில நாளாக, கொரோனா' தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக, தம்மம்பட்டி பேரூராட்சி, சுகாதாரத்துறை சார்பில், வணிகர் சங்கம், அனைத்து வியாபாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. அதில், பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரமூர்த்தி பேசியதாவது: கெங்கவல்லி வட்டாரத்தில், இதுவரை, 72 பேருக்கு, தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது, 12 பேர், மருத்துவமனையில் உள்ளனர். தம்மம்பட்டியில் மட்டும், 18 பேருக்கு, தொற்று ஏற்பட்டதில், மூன்று பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். கடைகளில் பொருள் வாங்குபவர், விற்பனையாளர், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் வேண்டும். ஜூலை, 27(நாளை) முதல், மதியம், 3:00 மணிக்கு கடைகளை மூட வேண்டும். வியாபார நோக்கை தவிர்த்து, மனித நேயத்துடன் இருந்தால் தான் தொற்றை குறைக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார். வட்டார மருத்துவ அலுவலர் சதீஷ்குமார், சுகாதார பிரிவு அலுவலர்கள், போலீசார் பங்கேற்றனர்.


இரவு 9:00 மணி வரை திறக்க அனுமதிக்க கோரிக்கை: அம்மாபேட்டையில், சாலையோர கடைகள், இரவு, 9:00 மணி வரை செயல்பட அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகர மா.கம்யூ., கட்சி, சாலையோர வியாபாரிகள் சார்பில், நேற்று, மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் அளித்த மனு: அம்மாபேட்டையில், தள்ளு வண்டியில் பானிபூரி, தட்டுவடை செட், சில்லி சிக்கன், டிபன், சிப்ஸ் உள்ளிட்ட வியாபாரம் செய்து குடும்பத்தை காப்பாற்றுகிறோம். மாநகராட்சி பணியாளர், எங்களை தொழில் செய்ய விடாமல், நான்கு மாதமாக, 1,000, 500 ரூபாய் அபராதம் விதித்து, எங்கள் குடும்பத்தினரை பட்டினி போடும் நிலைக்கு ஆளாக்குகின்றனர். இரவு, 9:00 மணி வரை கடை வைக்க அனுமதிக்கவும், அபராதம் விதிப்பிலிருந்து காக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X