பொது செய்தி

தமிழ்நாடு

ஓமலூர், காடையாம்பட்டியில் 21 பேருக்கு 'வைரஸ்' உறுதி

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

ஓமலூர்: ஓமலூர், காடையாம்பட்டியில், ஒரே நாளில், 21 பேருக்கு, 'வைரஸ்' பாதிப்பு உறுதியானது.


காடையாம்பட்டி, கே.என்.புதூரைச் சேர்ந்தவர், 37 வயது ஆண். லாரி டிரைவரான இவர், கடந்த, 21ல், ஆக்ராவிலிருந்து சொந்த ஊர் வந்தார். 23ல் மேற்கொண்ட சோதனையில், தொற்று உறுதியானது. அன்று, அவரது குடும்பத்தினருக்கு மேற்கொண்ட சோதனையில், அவது தாய், 61, தந்தை, 63, மனைவி, 35, மாமியார், 58, ஆகியோருக்கு, தொற்று இருப்பது, நேற்று உறுதியானது. அத்துடன், கே.என்.புதூர், 26 வயது ர்ப்பிணிக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டது. சேலம், ஜாகீர்அம்மாபாளையத்தில் உள்ள, தனியார், 'வாஷிங் பவுடர்' நிறுவனத்தில் பணிபுரிந்த, காடையாம்பட்டி, செம்மாண்டப்பட்டியைச் சேர்ந்த, 55 வயதுடையவருக்கு, நேற்று முன்தினம், 'வைரஸ்' பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால், அவரது குடும்பத்தினருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், 20, 23, 55 வயதுடைய பெண்கள், 25 வயது ஆணுக்கு தொற்று, நேற்று உறுதியானது. ராமமூர்த்தி நகரைச் சேர்ந்த, 26 வயது ஆண், வெளிநாடு செல்ல, பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று உறுதியானது. வெளிமாநிலத்திலிருந்து வந்த, ஜோடுகுழி, குப்பிநாயக்கனூரைச் சேர்ந்த, 66 வயது ஆணுக்கு, வைரஸ் கண்டறியப்பட்டது. ஒரே நாளில், 11 பேருக்கு தொற்று ஏற்பட்டதால், மக்கள் முன் எச்சரிக்கையுடன் இருக்க, சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

10 பேர்: ஓமலூர், அடைக்கனூரில், மூன்று நாளுக்கு முன், தீயணைப்பு வீரருக்கு, தொற்று ஏற்பட்டதால், அவருடன் பழகிய, 20 பேருக்கு, பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 15, 17, 28, 30, 66 வயதுடைய பெண்கள், 45, 47, 60 வயதுடைய ஆண்களுக்கு, நேற்று தொற்று உறுதியானது. இதனால், பெரியார் பல்கலை சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், வெள்ளாளப்பட்டி, 48 வயது ஆண், கருப்பூர், 45 வயது ஆண் ஆகியோருக்கு, இருதய சோதனை செய்ய, மாமாங்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பரிசோதனையில், 'வைரஸ்' தொற்று உறுதியானது. இதனால், ஓமலூரில் மட்டும், நேற்று, 10 பேர் பாதிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X