பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? 29ல் கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
ஊரடங்கு, கலெக்டர், முதல்வர் இபிஎஸ், முதல்வர் பழனிசாமி, இபிஎஸ், எடப்பாடிபழனிசாமி, எடப்பாடிகே.பழனிசாமி, lockdown, curfew, Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, tamil nadu, chennai, tn cm, district collectors, tamil nadu

சென்னை: வரும் ஜூலை 31 அன்றுடன் ஊரடங்கு முடியும் நிலையில், அதை நீட்டிப்பது அல்லது கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருகிறது. நேற்று (ஜூலை 25) மட்டும் 6,988 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு ஜூல 31 அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில், பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும், ஞாயிற்றுக்கிழமைகளில் எவ்வித தளர்வுகளும் அளிக்கப்படாமல், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.


latest tamil news


இந்நிலையில், வரும் 29 ல் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடனும் முதல்வர் இ.பி.எஸ்., வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, ஊரடங்கு நீட்டிப்பதா அல்லது மேலும் தளர்வுகளை அளிக்கலாமா என்பது குறித்தும், ஆகஸ்ட் மாதத்திலும் ஞாயிறு தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-ஜூலை-202018:19:02 IST Report Abuse
ஆப்பு இனிமே ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு இல்லேன்னார
Rate this:
Cancel
ocean - Kadappa,இந்தியா
26-ஜூலை-202016:14:13 IST Report Abuse
ocean வரும் ஏப்ரல் மே மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ளது. வாக்காளர்களில குரோனாவில் மறைமுகமாக பாதிக்கப்பட்ட வாக்காளர்கள் அதிக அளவில். வருவார்கள். அவர்களது வாக்குகளை செலுத்த வாக்கு சாவடிகளுக்கு வருவார்கள் தேர்தல் அலுவலர்கள் அவர்கள் நகத்தில் அடையாள மை வைப்பதிலும் வாக்காளர் ஒருவர் பின் ஒருவராக வாக்கு பெட்டியில் தேர்தல் சின்னங்களை கை விரலால் அழுத்துவதில் குரோனா பரவ வாய்ப்புள்ளது. அதை எல்லாம் தடுக்க இப்போதிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது அவசியம்.அப்போது ஊரடங்கை செயல் படுத்துவது இயலாது.
Rate this:
Cancel
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
26-ஜூலை-202015:16:26 IST Report Abuse
Rangiem N Annamalai ஊர் அடங்கு தேவை இல்லை .மக்கள் அவர்களை அவர்களே பாது காத்து கொள்ள வேண்டும் .எச்சரிக்கையாக இருந்தால் போதும் .இயல்புவாழ்க்கை வந்து விடும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X