ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? 29ல் கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை| Tamil Nadu CM to hold consultations with district collectors on extending lockdown | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? 29ல் கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (14)
Share
ஊரடங்கு, கலெக்டர், முதல்வர் இபிஎஸ், முதல்வர் பழனிசாமி, இபிஎஸ், எடப்பாடிபழனிசாமி, எடப்பாடிகே.பழனிசாமி, lockdown, curfew, Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, tamil nadu, chennai, tn cm, district collectors, tamil nadu

சென்னை: வரும் ஜூலை 31 அன்றுடன் ஊரடங்கு முடியும் நிலையில், அதை நீட்டிப்பது அல்லது கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருகிறது. நேற்று (ஜூலை 25) மட்டும் 6,988 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு ஜூல 31 அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில், பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும், ஞாயிற்றுக்கிழமைகளில் எவ்வித தளர்வுகளும் அளிக்கப்படாமல், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.


latest tamil news


இந்நிலையில், வரும் 29 ல் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடனும் முதல்வர் இ.பி.எஸ்., வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, ஊரடங்கு நீட்டிப்பதா அல்லது மேலும் தளர்வுகளை அளிக்கலாமா என்பது குறித்தும், ஆகஸ்ட் மாதத்திலும் ஞாயிறு தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X