பொது செய்தி

தமிழ்நாடு

மரங்கள் சாய்ந்து மின்தடை

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

மேட்டூர்: மேட்டூர், அதன் சுற்றுப்பகுதியில், நேற்று மாலை, 3:30 மணி முதல், இடியுடன் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து, ஒன்றரை மணி நேரம் பெய்து நின்றது. மீண்டும் மாலை, 6:30 மணிக்கு தொடங்கி, மழை பெய்தது. பொன்னகர் பிரிவு அருகே, சாலையோரம் மரம் சாய்ந்து மின்கம்பி மீது விழுந்ததால், அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. கொளத்தூர் பகுதியிலும், மரங்கள் மின்கம்பிகள் மீது விழுந்ததால், இரவு, 7:00 மணி முதல், மின் வினியோகம் இல்லாமல், பல கிராமங்கள் இருளில் மூழ்கின.


தலைவாசல்: தலைவாசல் சுற்றுவட்டாரங்களில், நேற்று மதியம் முதல், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை, பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை, ஒன்றிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. விளைநிலங்களிலும் மழைநீர் தேங்கியதால், சேறு சகதியாக காட்சியளித்தது. அதேபோல், சேலம் மாநகர், மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X