பொது செய்தி

தமிழ்நாடு

அரசு ஆக்கிரமித்த கோவில் நிலம் மீட்பு

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

மகுடஞ்சாவடி: அரசே ஆக்கிரமித்த கோவில் நிலம் மீட்கப்பட்டது. மகுடஞ்சாவடி ஊராட்சி, பழைய சந்தைப்பேட்டையில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், சென்றாய பெருமாள் கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு, நம்பியாம்பட்டியில், 4.2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கடந்த பிப்ரவரியில், அந்த நிலத்தை ஒட்டி, வேம்படிதாளத்துக்கு, 1.5 கி.மீ., தூரம் சாலை அமைக்க, மகுடஞ்சாவடி ஊராட்சி சார்பில் ஒப்பந்தம் விடப்பட்டு, ஜல்லி, கற்கள், மண் குவிக்கப்பட்டு, பணி நடந்தது. இந்நிலையில், மகுடஞ்சாவடி வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், சாலை ஒப்பந்ததாரர், கோவில் செயல் அலுவலர் ஆகியோர், கோவில் நிலம் ஆக்கிரமிப்பு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, மகுடஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷனில், திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதா கிருஷ்ணன் புகாரளித்தார். அங்கும் நடவடிக்கை தாமதமாக, சென்னை உயர்நீதிமன்றத்தில், கடந்த, 17ல் வழக்கு தொடர்ந்தார். இதனால், சங்ககிரி டி.எஸ்.பி., நமச்சிவாயம்(பொ) தலைமையில், நேற்று காலை, 50 போலீசார் குவிக்கப்பட்டு, வருவாய்த்துறையினர், ஹிந்து சமய அறநிலைய துறையினர் முன், ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டு, எல்லை கற்கள் நட்டு, 100 மீ., தூரம், ஜல்லி கற்கள் அகற்றப்பட்டன.


இதுகுறித்து, ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், 4.75 லட்சம் ஏக்கர் நிலம் கோவிலுக்கு சொந்தமானது என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது. பழைய ஆவணங்களில், 5.5 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது. தண்ணீர் பந்தல், அன்னதானகூடம் அமைக்க என, பல்வேறு வகையில், 10 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது. இதை முறையாக நிர்வகித்தால், அரசின் நலத்திட்டங்களுக்கு செலவிட முடியும். இனி, இந்த மாதிரி சொத்துகள் மீட்கப்படும். சென்றாய பெருமாள் கோவிலுக்கு, நல்ல கதவு உள்பட எந்த வசதியும் இல்லை. அரசுத்துறை அதிகாரிகள், கோவில் சொத்தை பாதுகாக்க, உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், பாதுகாக்க தவறியதால், சென்றாய பெருமாள் கோவில் நிலத்தில் சாலை அமைத்துள்ளனர். இன்று(நேற்று), அரசு ஆக்கிரமித்த கோவில் நிலத்தை மீட்டது, வரலாற்றில் இதுவே முதல்முறை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X