பொது செய்தி

தமிழ்நாடு

தினக்கூலி பணியாளர் சங்கம் நாளை முதல் வேலைநிறுத்தம்

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

சேலம்: சேலம் மாநகராட்சி தினக்கூலி பணியாளர் சங்கம், நாளை முதல், காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து, அச்சங்க தலைவர் சுதாகரன், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஒரு தொழிலாளி, 24 மாதத்தில், 480 நாளுக்கு மேல் பணிபுரிந்தால், அவரை பணி நிரந்தரப்படுத்த, தொழிலாளர் சட்டம் வலியுறுத்துகிறது. சேலம் மாநகராட்சியில், 659 தொழிலாளர், 633 நாள், நேரடி தினக்கூலியிலும், மாநகராட்சி ஒப்பந்தம் செய்த தனியார் நிறுவனத்தில், 15 ஆண்டு தினக்கூலியாகவும், துப்புரவு பணி செய்த நிலையில் நிரந்தரப்படுத்தவில்லை. கோட்டாட்சியர், தொழிலாளர் நல ஆணையம், உயர்நீதிமன்றம் ஆகியவை, பணிநிரந்தரம் செய்ய ஒப்புதல் வழங்கியும், மாநகராட்சி மெத்தனம் காட்டுகிறது. தொழிலாளர் விரோதப்போக்கை கண்டித்து, ஜூலை, 27(நாளை) முதல், காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய, சங்க நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளது. இதில், தினக்கூலி துப்புரவு பணியாளர் பங்கேற்பர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X