குழாய் உடைந்து சாலை சேதம்; தடுமாறி விழும் வாகன ஓட்டிகள்

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

நரசிங்கபுரம்: காவிரி குடிநீர் குழாய் உடைந்ததால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேட்டூர் - ஆத்தூர் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம், ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சிகளுக்கு, காவிரி குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதற்கான குடிநீர் குழாய், நரசிங்கபுரம், ஆத்தூர் வழியாக செல்லும், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பதிக்கப்பட்டுள்ளது. இரு நாளுக்கு முன், நரசிங்கபுரம், மசூதி அருகே, சாலை நடுவே குழாய் உடைந்து, தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால், சாலையில் பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்பதால், இரவில் செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்தனர். அதே பள்ளத்தில், தற்போது கற்களை போட்டுள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள், அந்த வழியாக செல்லும்போது விபத்துக்குள்ளாகின்றனர். நரசிங்கபுரம் நகராட்சி கமிஷனர் சேகர் கூறுகையில், ''குழாய் உடைப்பு குறித்து, குடிநீர் வடிகால் வாரிய அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளோம். ஓரிரு நாளில் சரிசெய்வதாக கூறினர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X