பொது செய்தி

தமிழ்நாடு

இன்று முழு ஊரடங்கால் கடைகளில் குவிந்த மக்கள்

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

தர்மபுரி: இன்று, முழு ஊரடங்கால், தர்மபுரி நகர் உட்பட மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்க பொதுமக்கள் குவிந்தனர். கொரோனா பரவலை தடுக்கும் வகையில், தமிழக அரசு இம்மாத ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கிற்கு உத்தரவிட்டது. இதன்படி, இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால், கடந்த வாரங்கள் போல் நேற்றும், தர்மபுரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வியாபாரிகள் மாலை, 4:00 மணிக்கு மேல் கடை விரித்தனர். கொரோனா குறித்து, மாவட்ட நிர்வாகம், பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து, பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், பொதுமக்கள் கொரோனா குறித்து விழிப்புணர்வு இல்லாமல் உள்ளதால், மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று, அரசின் முழு ஊரடங்கு அறிவிப்பால், நேற்று தர்மபுரி உட்பட மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில், அத்தியாவசிய பொருட்களை வாங்க, மக்கள் கடைகளில் அதிகளவில் குவிந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X