பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே நாளில் 32 பேருக்கு கொரோனா பாதிப்பு

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், ஐந்து சிறுவர்கள் உட்பட, 32 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். வெளிமாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து வருவோர்களால், தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதேபோன்று நேற்று, பென்னகரத்தை சேர்ந்த, ஏழு வயது மாணவி, 20 வயது மாணவன் மற்றும், 13 வயது மாணவி உட்பட, மாவட்டம் முழுவதும், 32 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள், செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் நேற்று வரை மொத்தம், 537 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X