பொது செய்தி

தமிழ்நாடு

பழங்குடியினருக்கு நிவாரண பொருட்கள்

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

அரூர்: அரூர் அருகே, சமூக சமத்துவப்படை கட்சி சார்பில், பழங்குடியின மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில், ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், கீரைப்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட, இந்திரா நகர், வாழைத்தோட்டம், வள்ளிமதுரை ஆகிய கிராமங்களில், வருவாய் இழந்து தவிக்கும், இருளர் மற்றும் மலைவாழ் பழங்குடியின வகுப்பை சேர்ந்த, 200 குடும்பத்தினருக்கு அரிசி, பருப்பு, மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை சமூக சமத்துவப்படை கட்சி சார்பில், அக்கட்சியின் தர்மபுரி மாவட்ட தலைவர் புத்தமணி சாக்ரடீஸ் வழங்கினார். இதில், கீரைப்பட்டி பஞ்., தலைவர் அமுதா சங்கர், துணைத்தலைவர் ஏழுமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X