பொது செய்தி

தமிழ்நாடு

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை; உறுதிமொழி சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

தர்மபுரி: வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை தொடர்ந்து பெற, சுய உறுதிமொழி ஆவணத்தை ஆக.,30க்குள் சமர்ப்பிக்க, கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் வேலைவாய்ப்பு அற்றோருக்கான உதவித்தொகை வழங்கப்படுகிறது. தொடர்ந்து இந்த திட்டத்தில் பயன்பெற ஒவ்வொரு ஆண்டும் சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும். கொரோனா ஊரடங்கால் நடப்பாண்டில், இதற்கான கால அவகாசம் கடந்த, ஜூன் முதல் வரும் ஆக., 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெருபவர்கள் இந்த, கால அவகாசத்தை பயன்படுத்தி, உரிய படிவத்தில் சுய உறுதிமொழி ஆவணம், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கான ஒப்புக்கை சீட்டு, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேஷன்கார்டு, மாற்றுத்திறனாளி புத்தக நகல் மற்றும் வங்கி புத்தகத்தில் மைக்ரோ கோடு, ஐ.எப்.எஸ்.சி., கோடு, கிளை கோடு முத்திரையிடப்பட்ட நகலை வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X