பாசன வாய்க்காலை சீரமைக்க விவசாயிகள் வேண்டுகோள்

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் பெரிய ஏரிக்கு, கே.ஆர்.பி., அணையில் இருந்து வரும், பாசன வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ளது மணிக்கட்டியூர் கிராமம். அங்கு, கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணை நிரம்பி தண்ணீர் வரும்போது, காரிமங்கலத்துக்கு உட்பட்ட பெரியஏரி நிரம்பி, அதன் பாசன வாய்க்கால் வழியாக தண்ணீர் செல்ல, இரண்டு மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், திண்டல் ஏரிக்கு ஒரு மதகும், மணிக்கட்டியூர் ஏரிக்கு செல்ல ஒரு மதகும் அமைக்கப்பட்டுள்ளது. திண்டல் ஏரி பாசன வாய்க்காலில், கொள்ளுபட்டி, மொட்டலூர், ராமபுரம், எச்சனம்பட்டி, திண்டல், பந்தாரஹள்ளி, கீழ்சவுளுபட்டி, மண்ணாடிபட்டி, நடுக்குட்டை, நடுக்கொட்டாய், முள்ளனூர் உள்ளிட்ட ஏரிகள் உள்ளன. மறுபுறம் உள்ள மணிகட்டியூர் பாசன கால்வாயில் இருந்து, நாகலேரி, குட்டூர், வண்ணான், பெரியமிட்டஹள்ளி, உச்சம்பட்டி, தொல்லம்பட்டி, கரகபட்டி, சின்னமிட்டஹள்ளி, சிக்கதிம்மனஹள்ளி உள்ளிட்ட ஏரிகள் உள்ளன. இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் பெய்த கனமழையால், இந்த இரண்டு ஏரிகளுக்கு செல்லும் பாசன வாய்க்கால்கள் சேதமாகின. இதனால், பல ஏரிகளுக்கு செல்லும் இந்த பாசன வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X