பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் பட்டியல்

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்கும் பணி துவங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, நான்கு கல்வி மாவட்டங்களில், 9,100 மாணவர்கள், 10 ஆயிரத்து, 80 மாணவியர் என மொத்தம், 19 ஆயிரத்து, 180 பேர் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதினர். கடந்த, 16ல் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 7,563 மாணவர்கள், 9,139 மாணவியர் என மொத்தம், 16 ஆயிரத்து, 702 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவ, மாணவியர் தங்களது உயர்க்கல்விக்கு விண்ணப்பிக்க வசதியாக, தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்க, கல்வித்துறை உத்தரவிட்டது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில், மாணவ, மாணவியருக்கு நேற்று, தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்கும் பணி துவங்கியது. மாணவர்கள் எண்ணிக்கையை பொறுத்து, பள்ளிகளில் கூட்டம் சேராமல் தடுக்க, மதிப்பெண் பட்டியல் வாங்க வரும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்கும் பணியை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பிரபாகர் துவக்கி வைத்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேந்திரன், உதவி தலைமை ஆசிரியர் பசவராஜூ உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X