பொது செய்தி

தமிழ்நாடு

மன அழுத்தத்தை குறைக்க போலீசாருக்கு யோகா பயிற்சி

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்க, யோகா பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. நேற்று நடந்த பயிற்சியில், 117 போலீசார் பங்கேற்றனர்.


கிருஷ்ணகிரி உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவேரிப்பட்டணம், மகராஜகடை, கிருஷ்ணகிரி டவுன், தாலுகா, குருபரப்பள்ளி, வேப்பனஹள்ளி, கே.ஆர்.பி., அணை மற்றும் அனைத்து மகளிர் ஸ்டேஷன் என மொத்தம், எட்டு போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், டி.எஸ்.பி., சரவணன் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார். வாரந்தோறும் சனிக்கிழமை மட்டும், போலீசாருக்கு யோகா பயிற்சி வழங்கப்படுகிறது. கடந்த, 18ல் முதல் முறையாக யோகா பயிற்சி வகுப்புகள் துவங்கின. இரண்டாவது வாரமான நேற்று, டி.எஸ்.பி., சரவணன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் கணேஷ்குமார், வெங்கடாசலம், சுரேஷ்குமார், பாஸ்கர் மற்றும் எஸ்.ஐ.,க்கள், எஸ்.எஸ்.ஐ.,க்கள், ஏட்டு, காவலர் என மொத்தம், 117 போலீசார், கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். தர்மபுரி தனியார் கல்லூரி முதல்வர் சுந்தரம், போலீசாருக்கு யோகா பயிற்சி வழங்கினார்.


* தர்மபுரி மாவட்டம், பொம்மிடி மற்றும் கடத்தூர் ஸ்டேஷனில் பணிபுரியும் போலீசாருக்கு, மனஅழுத்தம் குறைய, நேற்று காலை, 7:00 மணிக்கு, கடத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. அரூர் டி.எஸ்.பி., தமிழ்மணி தலைமையில் நடந்த பயிற்சியில், போலீசார் சமூக இடைவெளியை கடைப்பிடித்து யோகா பயிற்சி செய்தனர். அவர்களுக்கு, தியானம், மூச்சுப்பயிற்சி, ஆசனங்களை யோகா பயிற்சியாளர் பழனிதுரை வழங்கினார். தினமும், காலையில் ஆசனங்கள் செய்தால் மன அமைதியும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என அவர் தெரிவித்தார். தொடர்ந்து, போலீசாருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதில், இன்ஸ்பெக்டர் ஜெய்சல்குமார், எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X