பொது செய்தி

தமிழ்நாடு

திருநங்கைகளுக்கு வீடு கட்ட நிதியுதவி

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரையில், வீடு கட்ட நிதி இல்லாமல் தவித்த திருநங்கைகளுக்கு, நிதியுதவி வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை டவுன் பஞ்.,க்கு உட்பட்ட சுண்ணாலம்பட்டியில், திருநங்கைகள் சிலர் குடிசை வீடுகளில் வசித்து வந்தனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன், சூறைக்காற்றுடன் வீசிய கனமழையால் வீடுகள் சேதம் அடைந்தன. இதனால் அவர்கள்மிகவும் சிரமப்பட்டனர். இதையடுத்து, ஊத்தங்கரை டவுன் பஞ்., நிர்வாகம் மூலம், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில், மூன்று பேருக்கும், வீடு கட்ட பணி ஆணை வழங்கப்பட்டது. பணி ஆணை பெற்ற திருநங்கைகள், வீடு கட்ட போதிய நிதி வசதி இல்லாமல் தவித்து வந்தனர். இதை அறிந்த, ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சந்திரசேகரன், இரண்டு லட்சம் ரூபாயும், ஊத்தங்கரை லட்சுமி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் நிர்மலா கந்தசாமி ஒரு லட்சம் ரூபாயையும் காசோலையாக வழங்கினர். அவற்றை பெற்றுக்கொண்ட திருநங்கைகள் நன்றி தெரிவித்தனர். தி.மு.க., ஒன்றிய செயலாளர் சாமிநாதன், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாவட்ட தலைவர் கந்தசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் தினகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X