பொது செய்தி

தமிழ்நாடு

உதவித்தொகை கிடைக்காத புகார்; கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, கல்வி உதவித்தொகை கிடைக்கவில்லை என கூறி, மாணவ, மாணவியர் அளித்த புகார் மனுவின்படி, கல்வித்துறை விசாரணை நடத்தி வருகிறது.


தேன்கனிக்கோட்டை அடுத்த அந்தேவனப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில், 417 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அரசின் கல்வி உதவித்தொகை, பல ஆண்டுகளாக வழங்கப் படவில்லை என குற்றம்சாட்டிய முன்னாள், இன்னாள் மாணவ, மாணவியர், 22 பேர், தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் ஜோதி சந்திராவை கடந்த, 18ல் சந்தித்து, புகார் மனு கொடுத்தனர். அதன் மீது விசாரணை நடத்த, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டார். இதையடுத்து, 17 மாணவ, மாணவியர், தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலகத்தில் விசாரிக்கப்பட்டனர். அவர்களது, வங்கி கணக்கு விபரங்களையும் அதிகாரிகள் பெற்றனர். மீதமுள்ள, ஐந்து மாணவ, மாணவியரை நேரடியாக வீட்டிற்கே சென்று, கல்வி மாவட்ட அலுவலர் ஜோதிசந்திரா தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், விசாரணை நடத்தினர். இதில், ஆறாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கவில்லை என தெரிந்தது. மற்ற மாணவ, மாணவியருக்கு வங்கியில் பணம் செலுத்தப்பட்டுள்ளதா என்ற விபரத்தை பெற்ற பின், மேற்கொண்டு விசாரணை நடத்த கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதிகாரிகள் விசாரணையின் போது, பள்ளியில் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட ஆசிரியர் ஒருவர், பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவியர் தெரிவித்துள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாணவியரின் பெற்றோர், போலீசில் புகார் செய்ய தயாராகி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X