ரூ.6,435 கோடி வங்கி கடன் திட்ட அறிக்கை: கலெக்டர் வெளியீடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.6,435 கோடி வங்கி கடன் திட்ட அறிக்கை: கலெக்டர் வெளியீடு

Added : ஜூலை 26, 2020
Share

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 6,435 கோடி ரூபாய் வங்கி கடன் திட்ட அறிக்கையை, மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்டார்.


கிருஷ்ணகிரி மாவட்டத்தின், முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி, ஒவ்வொரு ஆண்டும் வங்கிகளுக்கான, ஆண்டு கடன் திட்டத்தை வெளியிட்டு வருகிறது. நடப்பு, 2020 - 21ம் ஆண்டிற்கு, 6,435 கோடி ரூபாய், வங்கி கடன் திட்ட அறிக்கையை, வங்கியாளர்கள் கூட்டத்தில், கலெக்டர் பிரபாகர் வெளியிட்டார். முதல் பிரதியை, இந்தியன் வங்கி மண்டல மேலாளர் திருமாவளவன் பெற்றுக்கொண்டார்.

கூட்டத்தில் கலெக்டர் பிரபாகர் பேசியதாவது: இந்த திட்ட அறிக்கை, நபார்டு வங்கியின், வளம் சார்ந்த கடன் திட்டத்தை பின்பற்றி தயாரிக்கப் பட்டுள்ளது. மொத்தம், 6,435 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயத்துக்கு, 4,430 கோடி ரூபாய், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு, 1,037 கோடி ரூபாய் கடன் தர உத்தேசிக்கப் பட்டுள்ளது. மரபுசாரா எரிசக்தி துறைக்கு, 18 கோடி ரூபாய், கல்விக்கடன், 110 கோடி ரூபாய் மற்றும் வீட்டுக்கடனுக்கு, 310 கோடி ரூபாயும் வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. எனவே, வங்கியாளர்கள் கடன் திட்டத்தை செயல்படுத்தி, நிர்ணயித்த அனைத்து இலக்கையும் எட்ட வேண்டும். அனைத்து, அரசு துறைகள் மூலம் வழங்கப்படும் மானிய கடன் திட்டங்களையும், விரைவில் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி அலுவலர் நஸ் ரீன் சலீம், இந்தியன் வங்கி மேலாளர் பாஸ்கர், மாவட்ட தொழில் மைய மேலாளர் பிரசன்ன பாலமுருகன், இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன மேலாளர் சங்கர்கணேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X