பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., இளைஞரணியில் பொறுப்பு; விண்ணப்பிக்க எம்.எல்.ஏ., அழைப்பு

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

ஓசூர்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில், தி.மு.க., இளைஞரணியில் பொறுப்பு வழங்கப்பட உள்ளதால், இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என, தளி தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி, மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தளி வடக்கு, தெற்கு, அஞ்செட்டி, கெலமங்கலம், ஓசூர் ஒன்றியம், சூளகிரி வடக்கு, தெற்கு, வேப்பனஹள்ளி, ஓசூர் மாநகரம், தேன்கனிக்கோட்டை பேரூர், கெலமங்கலம் பேரூர் பகுதிகளில், தி.மு.க., இளைஞரணிக்கு, ஒரு அமைப்பாளர், ஐந்து துணை அமைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதேபோல், கிராமப்புற கிளை, மாநகர வார்டு கிளைக்கு, ஒரு அமைப்பாளர், மூன்று துணை அமைப்பாளர், பேரூர் வார்டு கிளைக்கு, ஒரு அமைப்பாளர், இரு துணை அமைப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். எனவே, 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள், அந்தந்த மாநகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், தி.மு.க., இளைஞர் அணி அமைப்பாளர் சீனிவாசன் அல்லது மாவட்ட துணை அமைப்பாளர்கள் அசோக், வேணு, முருகேசன், கிருஷ்ணன், ராமு ஆகியோரில், யாரையேனும் தொடர்பு கொண்டு, விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து, வரும் ஆக., 1க்குள் வழங்கலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X