சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிலப்பிரச்னையில் மோதல்: 8 பேர் மீது போலீசார் வழக்கு

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, எட்டு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கிருஷ்ணகிரி அடுத்த செம்படமுத்தூரை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன், 43; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த நசப்பட்டி பெருமாள் தரப்பினருக்கும் நிலப்பிரச்னை உள்ளது. கடந்த, 22 காலை இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த நசப்பட்டி பெருமாள் மற்றும் அவரது உறவினர்களான மொட்டையன், ரமேஷ், சிக்கல்சக்கான் ஆகியோர் தாக்கியதில், ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி பழனியம்மா காயமடைந்தனர். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ராஜேந்திரன் புகாரின்படி, நசப்பட்டி பெருமாள், மொட்டையன், ரமேஷ், சிக்கல்சக்கான் ஆகியோர் மீதும், அதேபோல் பெருமாள் புகாரின்படி, ராஜேந்திரன், கோவிந்தராஜ், ரகு, பழனியம்மாள் ஆகியோர் மீதும், கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X