சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேலூர் மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சி

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

வேலூர்: வேலூர் சிறையில், தற்கொலைக்கு முயன்ற கைதி, சென்னை, கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட, மானாமதுரையை சேர்ந்த பாண்டி, 32, என்பவர், வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அவர், பீடி பிடித்ததை, வார்டன் தட்டி கேட்டதால் கடந்த, 16ல், சேவிங் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதனால், வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து, இரண்டு நாள் சிகிச்சைக்கு பின், மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சக கைதிகள் அவரை கிண்டல் செய்ததால், நேற்று முன்தினம் மீண்டும் சிறை அறையிலுள்ள சுவற்றில் மோதி தற்கொலைக்கு முயன்றார். இதனால் அவரை, வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டதால், தற்கொலைக்கு முயல்வதாகவும், சென்னை கீழ்பாக்கம், அரசு மனநல மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை அளிக்கும்படியும், டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். இதையடுத்து, கைதி பாண்டி, நேற்று சென்னை கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X