பொது செய்தி

தமிழ்நாடு

மழையால் வாய்க்கால் உடைப்பு; 100க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளநீர்

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

கலசப்பாக்கம்: கலசப்பாக்கத்தில், ஓடை மற்றும் வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பில் உள்ள நிலையில், மழையின் போது வாய்க்கால் உடைந்து, கிராமங்களில், 100க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையடிவார பகுதிகளான, கலசப்பாக்கம் அடுத்த பட்டியந்தல், வீரளூர், மேல்சோழங்குப்பம் பகுதிகளில், கடந்த சில நாட்களாக இரவில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள நீர்வரத்து ஓடை மற்றும், ஏரி வாய்க்கால்களில் ஆக்கிரமிப்பு உள்ளதால், அவற்றில் நீர் தேங்கி, உடைப்பு ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் இருந்த, 100க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் அப்பகுதியில் உள்ள சேவை மையங்களில் தங்க வைக்கப்பட்டனர். வெள்ள நீரால் பாதித்த வீடுகளை, அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு கட்டி தர ஏற்பாடு செய்வதாக கூறினார். தொடர்ந்து, ஓடைகளில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகளுக்கு, அமைச்சர் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X