பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதித்து இறந்த மூதாட்டி உடல் அடக்கத்துக்கு மக்கள் எதிர்ப்பு

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

செய்யாறு: செய்யாறு அருகே, கொரோனா பாதித்து இறந்த மூதாட்டியை அடக்க செய்ய விடாமல், கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த குண்ணவாக்கத்தை சேர்ந்தவர், 65 வயது மூதாட்டி. இவர், கடந்த, 20ல், உடல்நலம் பாதிப் பால் செய்யாறு அரசு மருத் துவமனையில் சேர்ந்த அவருக்கு, கொரோனா பரிசோதனை நடந்தது. அவருக்கு காய்ச்சல் அதிகமானதால், 21ல், திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற் றப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது சடலத்தை கிராம சுடுகாட்டில் அடக்கம் செய்ய உற வினர்கள் ஏற்பாடு செய்தனர். இதற்கிடையே மூதாட்டிக்கு எடுத்த பரி சோதனையில் கொரோனா உறுதியானது. இதையறிந்த சுடுகாட்டு பகுதிக்கு அருகே வசிக்கும் மக்கள் சடலத்தை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். தகவலின்படி, செய்யாறு தாசில்தார் மூர்த்தி, டி.எஸ்.பி., சுரேஷ் சம்பவ இடம் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், கிராம மக்கள் இரவு, 10:00 மணிக்கு பிறகும், தொடர்ந்து போராட் டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள், மூதாட்டியின் சடலத்தை செய்யாறில் உள்ள, நவீன எரிமேடைக்கு கொண்டு சென்று, அரசு விதி முறைகளின்படி எரித்தனர். அதேபோல், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையில் இருந்த செய்யாற்றை சேர்ந்த, 50 வயது பெண், மேல்கொளத்தூரை சேர்ந்த, 80 வயது மூதாட்டி ஆகியோர் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். இருவரது சடலங்களும், அரசு விதிமுறைகளின்படி நேற்று முன்தினம் இரவு, அடக்கம் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X