பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா நிவாரண பணிக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி பகுதியில், கொரோனா நிவாரணப்பணி மேற்கொள்ள, அரசு சார்பில் இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் கூறியதாவது: மாநகராட்சியில் மார்ச், 15க்குப்பின் வரி வசூல் நிறுத்தப்பட்டது. இதனால் சம்பளம் உள்ளிட்ட இதர செலவுக்கு, அரசு சார்பில், ஏழு கோடி ரூபாய் வரை ஒதுக்கீடு செய்து, பணியை தொடர்கிறோம். மின் கட்டணம் மாதம், 1.5 கோடி ரூபாய் வரை வரும். அதையும் அரசே செலுத்துகிறது. தொழிலாளர் பற்றாக்குறை, நிதி போன்ற காரணத்தால், ஊராட்சிகோட்டை குடிநீர் திட்டப்பணி, ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணி தொய்வடைந்துள்ளது. அதேசமயம் மாநகராட்சி பகுதியில் கொரோனாவை கட்டுப்படுத்த, நிவாரண நிதியாக, இரண்டு கோடி ரூபாய் அரசு ஒதுக்கியுள்ளது. இதன் மூலம், தடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X