பொது செய்தி

தமிழ்நாடு

கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; 961 கன அடி தண்ணீர் வெளியேற்றம்

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், அணையிலிருந்து வினாடிக்கு, 961 கன அடி தண்ணீர் நேற்று வெளியேற்றப்பட்டது.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் நேற்று முன்தினம், 658 கன அடி நீர்வரத்து இருந்த நிலையில், அணையிலிருந்து, 469 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை அணைக்கு நீர் வரத்து, 739 கன அடியாக அதிகரித்தது. அணையின் மொத்த உயரமான, 52 அடியில், 30.60 அடிக்கு நீர் இருப்பு இருந்ததால், தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 885 கன அடியும், பாசன கால்வாய்களில், 76 கன அடியும் என மொத்தம், 961 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு, நேற்று முன்தினம் வரை தொடர்ந்து மூன்று நாட்களாக, 720 கன அடி நீர்வரத்து இருந்த நிலையில், நேற்று நீர்வரத்து, 640 கன அடியாக சரிந்தது. அணையில் போதிய நீர் இருப்பால், நேற்று வரத்தான தண்ணீர் முழுவதும், தென்பெண்ணை ஆற்றின் வழியாக, கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணைக்கு திறந்து விடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X