மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு

Added : ஜூலை 26, 2020
Share

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து, 4,977 கனஅடியாக அதிகரித்தது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கொள்ளளவு, 93.47 டி.எம்.சி., கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட நீர், தொடர்ச்சியாக வருவதால், நேற்று முன்தினம் வினாடிக்கு, 4,710 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து, நேற்று, 4,977 கனஅடியாக அதிகரித்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு, 7,000 கன அடியாக இருந்த, கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளின் நீர்வரத்து, நேற்று, 8,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. அதற்கேற்ப, வரும் நாளில், மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம், 66.42 அடி, நீர் இருப்பு, 29.70 டி.எம்.சி.,யாக இருந்தது. வினாடிக்கு, 10 ஆயிரம் கனஅடி நீர் பாசனத்துக்கு திறக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X