பொது செய்தி

தமிழ்நாடு

மனைவிக்கு கிடைத்த ஜாமினில் வெளியே வந்த கணவர்: சேலம் சிறையில் நடந்த கூத்தால் கண்காணிப்பாளருக்கு 'சிக்கல்'

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

சேலம்: கொலை வழக்கில், மனைவிக்கு கிடைத்த ஜாமினில், அவரது கணவர் விடுவிக்கப்பட்ட கூத்து, சேலம் மத்திய சிறையில் அரங்கேறியது. இச்சம்பவத்தால், ஜெயிலருக்கு, 'மெமோ' வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம், வெள்ளாளப்பட்டியை சேர்ந்தவர் சதாசிவம், 38. இவர், வீட்டுக்கு பின்புறமுள்ள ஓடையில், கடந்த ஜூன், 22ல், பிணமாக கண்டெடுக்கப்பட்டார். ஏத்தாப்பூர் போலீசார், கொலை வழக்குப்பதிந்து, அங்குள்ள கணவாய்காடு பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார், 39, அவரது மனைவி பவித்ரா, 24, ஆகியோரை கைது செய்து, மறுநாள், சேலம் சிறையில், தனித்தனியே அடைத்தனர். சென்னை உயர்நீதிமன்றம், கடந்த, 22ல், பவித்ராவுக்கு, ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. அதே நாளில், அதன் நகல், சேலம் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டது. ஆனால், பெண்கள் கிளைச்சிறையில் அடைக்கப்பட்ட பவித்ராவை விடுவிப்பதற்கு மாறாக, அவரது கணவர் ரஞ்சித்குமார், 23ல், மத்திய சிறையில் இருந்து, வெளியே வந்து விட்டார். இதையறியாத, பவித்ராவின் பெற்றோர், மத்திய சிறைக்கு சென்று, மகளுக்கு ஜாமின் கிடைத்தும், அவரை ஏன் வெளியே அனுப்பவில்லை என கேள்வி எழுப்பி முறையிட்டனர். பின், சிறை போலீசார், நீதிமன்ற உத்தரவை படித்து பார்த்தபோது, தவறு நடந்தது தெரிந்தது. இதையடுத்து, ரஞ்சித்குமாரை அழைத்து வந்து, நேற்று முன்தினம், மத்திய சிறையில், மீண்டும் அடைத்த பின், பவித்ராவை விடுவித்தனர். இதுகுறித்து, சிறைத்துறை கண்காணிப்பாளர் தமிழ்செல்வன் விசாரணை நடத்தினார். அதன் அறிக்கை, சிறைத்துறை, கோவை டி.ஐ.ஜி.,க்கு அனுப்பப்பட்டது.

இதுகுறித்து, டி.ஐ.ஜி., சண்முகசுந்தரம் கூறியதாவது: நீதிமன்ற உத்தரவை சரிவர படிக்காததால், தவறு நடந்துள்ளது. வழக்கு குற்ற எண், முகவரி உள்ளிட்ட அனைத்தும் ஒன்றாக இருந்ததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் மதிவாணன் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவருக்கு, மெமோ வழங்கி, விளக்கம் கோரப்படும். அதில் திருப்தி இல்லையெனில், மேல் நடவடிக்கை தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X