தமிழ்நாடு

ஊரடங்கால் பஸ்களின் இயக்கம், டீசல் கொள்முதல் நிறுத்தம்: மத்திய, மாநில அரசுகளுக்கு ரூ.1,500 கோடி வரி வருவாய் இழப்பு

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

பொது போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடையால், அரசு பஸ்களின் இயக்கம் முடங்கி, டீசல், டயர் உள்ளிட்ட உதிரிபாகம் கொள்முதல் நிறுத்தப்பட்டதால், மத்திய, மாநில அரசுகளுக்கு, போக்குவரத்துக்கழகங்கள் மூலம் கிடைத்த வரி வருவாயில், 1,500 கோடி ரூபாய் வரை, இழப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், கொரோனா பரவலை தடுக்க, பொது போக்கு வரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால், கடந்த மார்ச், 24 முதல், அரசு பஸ்களின் இயக்கம் முடங்கியது. 20 ஆயிரத்து, 200 தடங்களில் இயக்கப்பட்ட, 20 ஆயிரம் பஸ்களின் இயக்கமும் தடைபட்டுள்ளது. இதற்கு, தினமும் எரிபொருள் பயன்பாட்டுக்கு, போக்குவரத்துக்கழகங்கள் கொள்முதல் செய்த, 20 லட்சம் லிட்டர் டீசல் கொள்முதலை நிறுத்திவிட்டன. அதன்படி, மார்ச், 24 முதல், நேற்று வரை, 122 நாளில், பஸ் எரிபொருளாக பயன்படுத்தப்படும், 24 கோடியே, 40 லட்சம் லிட்டர் டீசலை போக்குவரத்துக்கழகங்கள் கொள்முதல் செய்யவில்லை. நேற்றைய நிலவரப்படி, ஒரு லிட்டர் டீசல், 78.60 ரூபாய்க்கு விற்பனையானது. இதில், மத்திய அரசுக்கு கலால் வரி, 32.98 ரூபாய், மாநில அரசுக்கு, வாட், விற்பனை வரி, 21 ரூபாய் வீதம், 53.98 ரூபாய் இழப்பு ஏற்பட்டது. அதன்படி, நேற்று வரை, டீசல் கொள்முதல் செய்யப்படாததால், 1,317.11 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. அதேபோல், டயர், உதிரிபாகம் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளதால், அதன் மூலம், மாதம், 61 கோடி ரூபாய் கிடைக்கும் வரி வருவாயில், மூன்று மாதத்தில், 183 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், மத்திய, மாநில அரசுகளுக்கு, வரி வருவாயாக வரும், 1,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: அரசுகளுக்கு, வரி வருவாய் இழப்பு மட்டுமின்றி, போக்குவரத்துக்கழகங்களும் கடும் இழப்பை சந்தித்துள்ளன. தொழிலாளர்களின் சம்பளத்துக்கு, மூன்று மாதமாக, தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்திடமிருந்து, 500 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டுள்ளது. அத்துடன், அரசால் வழங்கப்பட்ட, 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புது பஸ்களின் இயக்கம் முற்றிலும் முடங்கிய நிலையில், அவற்றை மீண்டும் இயக்க, 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்ய வேண்டியுள்ளது. அதனால், தமிழக அரசு, ஆக., 1 முதல், பஸ்களை இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது: இதுவரை, போக்குவரத்துக்கழகங்கள் பயன்படுத்தும் எரிபொருள், உதிரிபாகங்கள் மூலம், பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை குவித்த மத்திய, மாநில அரசுகள், ஓராண்டுக்கு வரி இல்லாமல், டீசல், உதிரிபாகங்களை வழங்கி, போக்குவரத்துக்கழகங்களை மேம்படுத்த வேண்டும். கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் கருதி, ஆக., 1 முதல், அரசு பஸ்களின் சேவையை தொடங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X