தமிழ்நாடு

கர்நாடகா மாநில அணைகளில் 70 டி.எம்.சி., நீர் இருப்பு; தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

கர்நாடகா மாநிலத்தில், காவிரியாற்றின் வழியில் உள்ள அணைகளில், 70 டி.எம்.சி., தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு, கூடுதல் தண்ணீர் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.
கேரளா, கர்நாடகா மாநிலங்களில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. ஆனால், மழை சீராக இல்லாமல் விட்டு விட்டு பெய்கிறது. இதனால், காவிரியாற்றின் வழியில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள அணைகளுக்கு தண்ணீர் வரத்து தாமதமாக வந்து கொண்டிருக்கிறது.

இதுகுறித்து, டெல்டா மாவட்ட விவசாயிகள் கூறியதாவது: தென் மேற்கு பருவமழை துவங்கும் போது, காவிரியாற்றின் வழியில் உள்ள ?ஹமாவதி, ?ஹரங்கி, கே.ஆர். எஸ்., மற்றும் கபினி அணைகளில், 42 டி.எம்.சி., தண்ணீர்தான் இருந்தது. நேற்றைய நிலவரப்படி, 70 டி.எம்.சி., தண்ணீர் இருப்பு உள்ளது. ?ஹமாவதி அணை தண்ணீர், கே.ஆர்.எஸ்., அணைக்கு திருப்பி விடப்படும். பிறகு, கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து காவிரியாற்றில் திறக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. ஏற்கனவே, கர்நாடகா அணைகளில் இருந்து, 6,500 கன அடி தண்ணீர் காவிரியாற்றில் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீர் திறப்பை, கர்நாடகா அரசு அதிகப்படுத்த உத்தரவிடுமாறு, காவிரி மேலாண்மை வாரியத்தை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். ஆனால், சரியான நேரத்தில் தண்ணீர் திறந்தால்தான், தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடியை மேற்கொள்ள முடியும். கடந்தாண்டு ஜூலை மாதம், மூன்றாவது வாரத்தில் இருந்துதான், கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆகஸ்ட், 1 முதல் நீர்வரத்து அதிகரித்தது. வினாடிக்கு, 10 ஆயிரமாக இருந்த தண்ணீர் வரத்து, ஆகஸ்ட், 13ல், இரண்டு லட்சத்து, 30 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. இதனால், மேட்டூர் நீர்மட்டம், 101 அடியை எட்டியது. அதேபோல், வரும் ஆகஸ்ட் மாதத்தில் தண்ணீர் வரும் என, எதிர்பார்க்காமல் ஜூலை மாதத்துக்குரிய பங்கை, அரசு கேட்டு பெற வேண்டும். இல்லையென்றால், ஆகஸ்ட் மாதத்தில் உபரி தண்ணீரை திறந்து விட்டு, கணக்கு காட்டுவர். தற்போது, தண்ணீர் கிடைத்தால்தான், டெல்டா மாவட்டங்களுக்கு குறுவை பாசனத்துக்கு திருப்பி விட முடியும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X