பொது செய்தி

தமிழ்நாடு

குடியாத்தத்தில் பழுதாகி நின்ற ஆம்புலன்ஸை கொரோனா பாதித்தவரும் தள்ளிச்சென்றதால் சர்ச்சை

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

வேலூர்: குடியாத்தத்தில், கொரோனா பாதித்தவரை அழைத்துச்சென்ற ஆம்புலன்ஸ் பழுதாகி நின்றதால், அதை கொரோனா பாதித்தவரும் தள்ளிச்சென்றதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே, 40 வயது ஆணுக்கு, நேற்று முன்தினம் கொரோனா உறுதியானது. இதனால் அவரை, ஆம்புலன்ஸில் ஏற்றி அன்று மதியம், 2:00 மணிக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். குடியாத்தம், நெல்லூர்பேட்டை அருகே சென்றபோது, பழுதாகி ஆம்புலன்ஸ் நின்றது. இதனால், டிரைவர் கிருபா, 46, ஆம்புலன்சை தள்ளும்படி கூறினார். கவச உடையில் இருந்த, 40 வயது மருத்துவ உதவியாளர் தயாநிதி, 45, தள்ளினார். ஆம்புலன்ஸ் நகராததால், அந்த வழியாக சென்ற, 22 வயது வாலிபரை துணைக்கு அழைத்தார். அவரும் சேர்ந்து தள்ளியும், ஆம்புலன்ஸ் நகரவில்லை. இதைப்பார்த்த ஆம்புலன்சில் இருந்த கொரோனா பாதித்த நபரும் இறங்கி வந்து, அவர்களோடு சேர்ந்து, சிறிது தூரம் தள்ளிச்சென்ற பிறகே, ஆம்புலன்ஸ், 'ஸ்டார்ட்' ஆனது. கொரோனா பாதித்தவர், ஆம்புலன்ஸை தள்ளிச்சென்றது, சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து, சுகாதாரத்துறையினர் விசாரணையில், போதிய பராமரிப்பு இல்லாததால் நிறைய ஆம்புலன்ஸ்கள் நடுவழியில் நிற்பதாக, ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஆம்புலன்சை தள்ளிவிட உதவிக்குச்சென்ற, 22 வயது வாலிபருக்கும், நேற்று கொரோனா தொற்று உறுதியானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X