பொது செய்தி

தமிழ்நாடு

இன்று முழு ஊரடங்கு; கலெக்டர் எச்சரிக்கை

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் கட்டுப்படுத்தும் வகையில், இன்று, எந்தவித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். அனைத்து பகுதிகளிலும் உள்ள டீ, மளிகை, காய்கறி, உழவர் சந்தை, அனைத்து விதமான இறைச்சி விற்பனை கடைகள், ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்களும் மூடப்பட வேண்டும். பால் விற்பனை, மருந்தகங்கள், மருத்துவமனைகள் மட்டுமே செயல்படும். தீவிர மருத்துவ காரணங்கள் தவிர்த்து தேவையின்றி வாகனங்களில் சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். முழுமையான ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அரசு உத்தரவை மீறுபவர்கள் மீது பேரிடர் மேலாண்மைச்சட்டம், கொள்ளை நோய் தடுப்புச்சட்டம் ஆகியவற்றின் கீழ் கடும் நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு, கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X