பணிக்கு திரும்பிய எஸ்.எஸ்.ஐ.,க்கு வரவேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பணிக்கு திரும்பிய எஸ்.எஸ்.ஐ.,க்கு வரவேற்பு

Added : ஜூலை 26, 2020
Share

பள்ளிபாளையம்: கொரோனா தொற்றிலிருந்து பூரண நலம் பெற்று பணிக்கு திரும்பிய எஸ்.எஸ்.ஐ.,க்கு போலீசார் வரவேற்பு அளித்தனர். பள்ளிபாளையம், போலீஸ் எஸ்.எஸ்.ஐ., யாக பணிபுரிந்து வந்தவருக்கு, கடந்த, 1ல் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பூரண குணமடைந்தார். 14 நாள் ஓய்வுக்கு பிறகு, நேற்று அவர் பணிக்கு திரும்பினர். அவரை, மாவட்ட காவல்துறையின் சார்பாக, பள்ளிபாளையம் எஸ்.ஐ., தினேஷ், மற்றும் போலீசார் மாலை அணிவித்து, வரவேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X