பொது செய்தி

தமிழ்நாடு

உடற்பயிற்சி புத்தகம்; போலீசாருக்கு வழங்கல்

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் போலீசாருக்கு எளிய முறை உடற்பயிற்சி புத்தகம், மனவளக்கலை மன்றம் சார்பில் வழங்கப்பட்டது. பள்ளிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஏராளமான போலீசார் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் கொரோனா தொற்று பாதுகாப்பு பணியில் கடந்த ஐந்து மாதங்களாக தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போதையை சூழ்நிலையில் அவர்கள் நேரடியாக சென்று யோகா பயிற்சி எடுக்க முடியாத நிலை ஏற்பட்டதால், பள்ளிபாளையம் மனவளக்கலை மன்றம் சார்பில், அதன் தலைவர் சீனிவாசன், வேதாத்திரி மகரிஷியின் எளிய முறை உடற்பயிற்சி புத்தகத்தை, போலீசாருக்கு வழங்கினார். இந்த புத்தகத்தை படித்து பயிற்சி பெறுவது எளிய முறையில் உள்ளதால், இது போலீசாருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X