பொது செய்தி

தமிழ்நாடு

படைப்புழு தாக்குதல் கட்டுப்படுத்த யோசனை

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

ராசிபுரம்: ராசிபுரம் வட்டாரத்தில், மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதல் அதிகம் உள்ளது. நடப்பு பருவத்தில் மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகள் கோடை உழவு செய்தல், கடைசி உழவில் வேப்பம் புண்ணாக்கு இடுதல், விதை நேர்த்தி செய்தல், அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்க இனக்கவர்ச்சி பொறி வைத்தல், ஊடு பயிர் மற்றும் வரப்பு பயிராக பயறு வகை பயிர்களை பயிரிடுதல், பயிர் இடைவெளி, பயிரின் வயதிற்க்கு ஏற்ப பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல் வேண்டும். மேலும், 15-20 நாட்கள் வயதுடைய பயிர்களுக்கு அசாடிராக்டின், 1 சதவீதம் (அ) எமமெக்டின்பென்சோயிட், 5 எஸ்.ஜி., நான்கு கிராம் (அ) தயோடிகார்ப் 75 சதவீதம், டபிள்யூபி- 20கி 10லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் குருத்து பகுதியில் நன்கு படுமாறு தெளிக்க வேண்டும். 40-45 நாட்கள் வயதுடைய பயிர்களுக்கு, ஸ்பைனிடொரம், 12 எஸ்சி, 10 லிட்டர் தண்ணீரில் கலந்து கைதெளிப்பான் மூலம் குருத்து பகுதியில் நன்கு படுமாறு தெளித்தல் வேண்டும். விவசாயிகள் மேற்கண்டவற்றை பின்பற்றி மக்காச்சோளப்பயிரில் அதிக மகசூல் பெற்று பயனடையலாம். இவ்வாறு, வேளாண் உதவி இயக்குனர் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X