ப.வேலூர்: ப.வேலூர் - மோகனூர் சாலையில் உள்ள தனியார் குடியிருப்பு பகுதியில், 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதிவாசிகள் ப.வேலூர் டவுன் பஞ்.,க்கு சொந்தமான வழித்தடத்தை ஹாலோ பிரிக்ஸ் கல்லால் மூணு அடி உயரத்திற்கு எழுப்பி அடைத்து அதற்கு முன்பாக கருங்கற்களை ஆறடி உயரத்திற்கு சாலையில் போட்டு வழித்தடத்தை மறைத்து விவசாயிகள், பொதுமக்கள் சென்று வரவிடாமல் தடுத்துள்ளனர். இந்நிலையில், இதுகுறித்த வழக்கு பரமத்தி உரிமையியல் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், டவுன் பஞ்.,க்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்த நிலம் பேரூராட்சிக்கே சேர்ந்தது என, தீர்ப்பு வெளியானது. ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம் தனியார் குடியிருப்புவாசிகள் ஆக்கிரமித்த பொது வழிப்பாதையில் உள்ள தடுப்புச் சுவர், நடைபாதைக்கு செல்லும் வழியில் முன்பு போடப்பட்டிருந்த தகர கேட்டை, பேரூராட்சி பணியாளர்கள் இடித்து அகற்றினர். டி.எஸ்.பி.,பழனிசாமி, டவுன் பஞ்., செயல் அலுவலர் சுப்ரமணி ஆகியோர் பணிகளை பார்வையிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE