பொது செய்தி

தமிழ்நாடு

குமாரபாளையம், பள்ளிபாளையத்தில் ஆய்வு; விதிகளை மீறிய கடைகளுக்கு 'சீல்' வைப்பு

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையம், பள்ளிபாளையத்தில், கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காத கடைகளுக்கு, 'சீல்' வைக்கப்பட்டது.


கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஒவ்வொரு கடைகளின் முன்பு கிருமிநாசினி, சோப்பு, தண்ணீர், வைத்திருக்க வேண்டும். கடையில் பணியாற்றுவோர் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அவை முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என, குமாரபாளையத்தில் நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட மதுவிலக்கு பிரிவு ஏ.டி.எஸ்.பி., ராமு தலைமையில் இந்த ஆய்வு நடந்தது. இதில், விதிமுறைகளை கடைப்பிடிக்காத ஓட்டல், பேக்கரி, டீக்கடை, மளிகை, துணிக்கடைகள், போட்டோ ஸ்டூடியோ உள்ளிட்ட, 23 கடைகளுக்கு, 'சீல்' வைக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. சாலைகளில் முகக் கவசம் அணியாமல் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்வோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தாசில்தார் தங்கம், ஆணையாளர் ஸ்டான்லிபாபு உள்ளிட்டோர் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.


* பள்ளிபாளையத்தில், தாசில்தார் தங்கம், ஆணையாளர் இளவரசன் மற்றும் அதிகாரிகள், ஜீவா ?ஷட், பஸ் நிறுத்தம், ஆண்டிக்காடு, வெப்படை வெடியரசம்பாளையம், ஒட்டமெதை மற்றும் பல இடங்களில் செயல்பட்டு வரும் பேக்கரி, சலூன் கடை, ஓட்டல் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், 10 கடைகளுக்கு, 'சீல்' வைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X