பொது செய்தி

தமிழ்நாடு

முகக்கவசம் அணியாத 600 பேருக்கு விழிப்புணர்வு

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

நாமக்கல்: மாவட்டம் முழுவதும் முகக்கவசம் அணியாமல் சென்ற, 600 பேருக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எஸ்.பி., சக்தி கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள்ளும் நேற்று காலை, 10:00 முதல், மாலை, 6:00 மணி வரை தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. இதில், முகக்கவசம் அணியாமல் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வந்த, 600 பேரை, 29 இடங்களில் நிறுத்தி வைத்தனர். கொரோனா தொற்று பரவாமல் தற்காத்து கொள்வதற்காக முகக்கவசம் அணிதல், கைகளை கிருமி நாசினி கொண்டு கழுவுதல், கையுறை அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் மற்றும் அவசியமின்றி வெளியில் சுற்றி திரியக்கூடாது போன்ற அறிவுரை வழங்கப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் விதிமுறைகளை கடைப்பிடித்து தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X